தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 989 பேருக்கு கரோனா! - கரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 18) புதிதாக 989 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

covid
covid

By

Published : Mar 18, 2021, 9:49 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (மார்ச் 18) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக சேலத்தில் கரோனா பரிசோதனை செய்வதற்கு தனியார் ஆய்வகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 259 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக 71 ஆயிரத்து 835 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 985 பேர், ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த இருவர், ஜார்கண்ட், கர்நாடகாவிலிருந்து வந்த தலா ஒருவர் என மொத்தம் 989 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 82 லட்சத்து 38 ஆயிரத்து 297 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலிருந்த எட்டு லட்சத்து 63 ஆயிரத்து 363 நபர்கள் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுக்கு உள்ளாகி இருந்தார்கள் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஆறாயிரத்து 222 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து இன்று (மார்ச் 18) 569 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 44 ஆயிரத்து 568 என உயர்ந்துள்ளது. அதேபோல் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் நான்கு பேர், தனியார் மருத்துவமனையில் ஐந்து பேர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 394 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 86 நபர்களுக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 77 நபர்களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 71 நபர்களுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 47 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 35 நபர்களுக்கும் என அதிகபட்சமாக கரோனா தீநுண்மி தாக்கம் உள்ளது.

மாவட்ட வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை

சென்னை - 2,40,245

கோயம்புத்தூர் - 56,814

செங்கல்பட்டு - 53,964

திருவள்ளூர் - 44,880

சேலம் - 32,964

காஞ்சிபுரம் - 29,847

கடலூர் - 25,322

மதுரை - 21,418

வேலூர் - 21,192

திருவண்ணாமலை - 19,566

திருப்பூர் - 18,763

தஞ்சாவூர் - 18,552

தேனி - 17,212

கன்னியாகுமரி - 17,259

விருதுநகர் - 16,746

தூத்துக்குடி - 16,409

ராணிப்பேட்டை - 16,280

திருநெல்வேலி - 15,849

விழுப்புரம் - 15,322

திருச்சி - 15,193

ஈரோடு - 15,026

புதுக்கோட்டை - 11,737

நாமக்கல் - 11,905

திண்டுக்கல் - 11,632

திருவாரூர் - 11,527

கள்ளக்குறிச்சி - 10,919

தென்காசி - 8,594

நாகப்பட்டினம் - 8,740

நீலகிரி - 8,472

கிருஷ்ணகிரி - 8,248

திருப்பத்தூர் - 7,678

சிவகங்கை - 6,854

ராமநாதபுரம் - 6,499

தருமபுரி - 6,687

கரூர் - 5,555

அரியலூர் - 4,762

பெரம்பலூர் - 2,296

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 962

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,045

ரயில் மூலம் வந்தவர்கள் 428

ABOUT THE AUTHOR

...view details