சென்னை: கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏறுவது, இறங்குவதுமாக உள்ளது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று (ஜூலை 26) 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 120 அதிகரித்து, ரூ. 36,200க்கும், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 அதிகரித்து ரூ. 4,525க்கும் விற்பனையாகிறது.