சென்னை: தங்க நகை நகை என்பது இந்திய அடித்தட்டு மக்களின் சேமிப்பு ஆகும். கையில் காசு இருக்கும் போதே நகை வாங்கு அல்லது நிலம் வாங்கு என கூறுவார்கள். அதிலும் நிலம் என்றால் கூட அதிகளவில் பணம் வேண்டும், ஆனால் நகை என்றால் நம் கையில் எவ்வளவு தொகை இருக்கின்றதோ அதற்கு ஏற்றபடி வாங்கிக் கொள்ளலாம்.
சிலர் தங்க நகையை ஆடம்பரத்திற்காக வாங்குவார்கள், சிலர் கவுரவத்திற்காக வாங்குவார்கள். ஆனால் பலரும் தங்களது எதிர்கால அத்தியாவசியத் தேவைக்காகத் தான் வாங்குகின்றனர். ஒரு கல்யாணம் முதல் காது குத்து வரை தங்க நகையின் பங்கு அத்தியாவசியம் ஆகும்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலையை சர்வதேச பொருளாதர சுழல் மத்தியில், சர்வதேச கமாடிட்டி மார்க்கெட்டடை பொருத்தே நீர்ணயம் செய்யப்பட்டுகிறது. இதனால் தங்கத்தின் விலையானது, தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவது வழக்கம். அதேபோல இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது, ஏற்றத்துடன் இருந்து வந்த நிலையில், தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் திங்கட்கிழமை சர்வேதச சந்தை தொடங்கிய நிலையில், அதிரடியாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்தது உட்சம் தொட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.480 வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (செப்.18) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5 ஆயிரத்து 540க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 320க்கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48 ஆயிரத்து 80க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.78க்கும், ஒரு கிலோ வெள்ளியின் ரூ.200 குறைந்து ரூ.78 ஆயிரமாகவும் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய விலை நிலவரம்: (செப்டம்பர் 18)
- 1 கிராம் தங்கம் (22 கேரட்) - ரூ.5,540
- 1 சவரன் தங்கம் (22 கேரட்) - ரூ.44,320
- 1 கிராம் தங்கம் (24 கேரட்) - ரூ.6,010
- 1 சவரன் தங்கம் (28 கேரட்) - ரூ.48,080
- 1 கிராம் வெள்ளி - ரூ.78
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,000
இதையும் படிங்க: ஆட்டநாயகன் பரிசு தொகையை வாரிக் கொடுத்த முகமது சிராஜ்... எத்தனை லட்சம் தெரியுமா?