தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் விலை திடீர் சரிவு! இதான் சரியான நேரம் சட்டு புட்டுனு கடைக்கு கிளம்புங்க!

Today gold price : இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் காரணமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 16) சற்று குறைந்து உள்ளது. சென்னையில் சவரனுக்கு ரூ.200 குறைந்து 44 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
இஸ்ரேல் - ஹமாஸ் போர் எதிரொலி: 3 நாட்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 11:40 AM IST

சென்னை: தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதர சுழல் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நீர்ணயம் செய்யபட்டு வருகிறது. இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து தான் தினமும் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது.

தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி அன்று தங்கம் விலையானது சவரனுக்கு ரூ.42 ஆயிரத்து 280 ஆக விற்பனையானது.

அதைத் தொடர்ந்து அக்டோபர் 7 ஆம் தேதி மதியம் அன்றே இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தாக்குதல் தொடங்கியது. அன்றைய தினமே தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. மேலும் அதைத் தொடர்ந்து, சர்வ தேச சந்தையில், கச்சா எண்ணெயில் முதலீடு அதிகமாக இருப்பதால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது.

தற்போது நேற்றைய சூழ்நிலையில், ஓரே நாளில் தங்கத்தின் விலையானது அதிகரிக்க தொடங்கியது. மேலும் "இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரோலியாக சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களில், 64 டாலர்கள் அதிகரித்ததே, உள்நாட்டிலும் விலை உயர காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று (அக்.16) தங்கம் விலை குறைந்து உள்ளது. அதாவது சென்னையில், 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 530க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.44 ஆயிரம் 240க்கும் விற்பனை ஆகி வருகிறது. இதேப்போல் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, கிராம் ரூ.77.50க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து, ரூ.77 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யபட்டு வருகிறது.

இன்றைய நிலவரம் (அக்டோபர் 16) :

  • 1 கிராம் தங்கம்(22கேரட்) - ரூ.5,530
  • 1 சவரன் தங்கம்(22கேரட்) - ரூ.44,240
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,000
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.48,000
  • 1 கிராம் வெள்ளி - ரூ.77.50
  • 1 கிலோ வெள்ளி - ரூ.77,500

இதையும் படிங்க: சர்வதேச உணவு தினம் : பட்டினியில்லா சமுதாயத்தை உருவாக்க போருக்கு தயாராகும் பசி!

ABOUT THE AUTHOR

...view details