சென்னை: 2023 செப்டம்பரின் தொடக்கத்திலிருந்து ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. இந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூபாய் 240 வரை குறைந்து உள்ளது. சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக வங்கி, உலக அரசியல், சர்வதேச கமாடிட்டி டிரேடிங் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தங்கத்தில் ஏன் பலர் முதலீடு செய்கிறார்கள் என்றால் கடந்த வருடங்களில் தங்கத்தின் விலை அவ்வபோது குறைந்து காணப்பட்டாலும் அதிகமான நேரங்களில் குறைந்ததை விட பல மடங்கு அதிகமான விலையை தொட்டு வருகிறது. தமிழ்நாடு பெண்கள் தங்களது சேமிப்புகளை அதிகமான நேரங்களில் தங்கத்திலேயே முதலீடு செய்கின்றனர். தங்கத்தை பொறுத்தவரை எளிதில் அதனை பணமாக மாற்றக் கூடிய வகையில் அமைந்து இருப்பதே தங்கத்தின் தனி சிறப்பாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஊழியரின் திருமணத்தை காண கடல் கடந்து வந்த சிங்கப்பூர் தொழிலதிபர்.. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்!
தமிழ்நாட்டு திருமணங்களில் தங்க ஆபரணங்கள் இன்றியமையாதது. இதற்காக திருமண பேச்சுகள் நடைபெறும் குடும்பங்கள் தங்கத்தின் விலையை ஏப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருப்போர் பலர் உள்ளனர். அந்த வகையில் அடுத்து அடுத்து பல முகூர்த்த தேதிகள் வரும் நாட்களில் வர உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று (செப்.5) தங்கத்தின் விலையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,545 எனவும், சவரனுக்கு ரூ.44,360 எனவும் விற்பனையாகி வருகிறது. அதேபோல, 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு ரூ.6015 எனவும், 8 கிராம் ரூ.48,120க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.79க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சென்னையில் இன்று (செப்.6) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.15 குறைந்து ரூ.5,530-க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதேப்போல் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இன்றைய நிலவரம்: (செப்டம்பர் 06, 2023)
- 1 கிராம் தங்கம் (22கேரட்) – ரூ.5,530
- 1 சவரன் தங்கம் (22கேரட்) – ரூ.44,240
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) – ரூ.6,000
- 1 கிராம் வெள்ளி – ரூ.78.50
- 1 கிலோ வெள்ளி – ரூ.78,500
இதையும் படிங்க:Krishna Jayanthi : கண்ணன் வந்தான்.. என்ன சொன்னான்? கிருஷ்ணர் அருளிய அன்பு உரை!