தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! - சென்னை செய்திகள்

Today Gold and Silver rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.700 உயர்ந்து, ரூ.46,960-க்கு விற்பனையாகி வருகிறது.

Today Gold and Silver rate
வரலாறு காணாத அளவு உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 29, 2023, 11:01 AM IST

சென்னை:தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், உள்நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தற்போது சர்வதேசச் சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 2 ஆயிரம் டாலர்களுக்கு மேல் தங்கம் விற்பனையாகி வருவதாலும், உள்நாட்டில் தங்கத்தின் விலை உயரத் துவங்கியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை 47 ஆயிரத்தைத் தொட்டுள்ளதால், நகை முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

சென்னையில் இன்று (நவ.29) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5,870-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,960-க்கும் விற்பனை ஆகி வருகின்றன. இதேபோல், வெள்ளி ஒரு கிராம் 70 காசுகள் உயர்ந்து ரூ.82.20-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.700 உயர்ந்து ஒரு கிலோ ரூ.82,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய விலை நிலவரம் (நவ: 29):

  • 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,870
  • 8 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.46,960
  • 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,404
  • 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.51,232
  • 1 கிராம் வெள்ளி - ரூ.82.20
  • 1 கிலோ வெள்ளி - ரூ.82,200

இதையும் படிங்க: விமான நிலைய பெண் ஊழியர்கள் வீடுகளில் சோதனை.. ரூ.5 கோடி விலையிலான தங்கம் பறிமுதல் - 4 பேர் அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details