சென்னை: இஸ்ரேல் - ஹமாஸ் இடைய நடைபெற்று வரும் போரின் எதிரொலி காரணமாக, சென்னையில் இன்று (அக்.31) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, சவரனுக்கு ரூ.45 ஆயிரத்து 280 ஆக விற்பனையாகி வருகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதார சுழ்நிலை, அரசியல், கமாடிட்டி மார்க்கெட்டை பொறுத்தே நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்காவின் வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன் வைத்து, தங்கத்தின் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் காணப்படும்.
தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உருவாகி உள்ள போரின் காரணத்தினால், தங்கத்தின் முதலீடு அதிகமாகி தங்கத்தின் விலை அதிகரித்தது. இந்த நிலையில், சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சத்தை தொட்டது. அதாவது சவரன் ரூ.46 ஆயிரத்து 160க்கு விற்பனையானது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து நேற்று காலை சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தை தொடங்கிய நிலையில், தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.280 குறைந்தது. தொடர்ந்து இன்றும் நகையின் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 715க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.45 ஆயிரத்து 720க்கும் விற்பனையாகிறது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி கிராமுக்கு 30 காசு குறைந்து 78.20க்கும், ஒரு கிலோவிற்கு 300 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.78 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய (அக்-31) நிலவரப்படி தங்கத்தின் விலை:
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,715
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,720
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,165
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.49,480
- 1 கிராம் வெள்ளி - ரூ.78.20
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,200
இதையும் படிங்க: அதிக செயல்திறனுடன் ஐமேக்ஸ் லேப்டாப்பை அறிமுகம் செய்த ஆப்பிள்!