சென்னை:செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னை தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்..!
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45). இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். மேலும் ஆய்வாளருக்கு வாகன ஓட்டுநராகவும் சந்திரசேகர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு சந்திரசேகர் வீட்டிற்குச் சென்று உள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள் காலை ஆந்திர மாநிலம் சத்தியவேடு காவல் நிலைய போலீசாரால் தலைமைக் காவலர் சந்திரசேகர் உட்பட 14 பேரை செம்மரம் கடத்தியதாகக் கைது செய்து அவர்களிடம் இருந்து சுமார் மூன்று டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
பின்னர், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் செம்மரக்கடத்தல் வழக்கில் தலைமைக் காவலர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்திப்ராய்ரத்தோர் செம்மரம் கடத்தல் வழக்கில் சிக்கிய தலைமைக் காவலர் சந்திரசேகரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார்.
சென்னையில் உளவுப்பிரிவு உதவி ஆய்வாளரைத் தாக்கி விட்டுத் தப்பிய இருவரில் ஒருவரைக் கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்..
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள மூப்பனார் மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் (டிச 19) இரவு இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் அதிக வேகமாகச் சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவர் மீது அவர்கள் சென்ற இரு சக்கர வாகனம் லேசாக மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர்.
அப்போது, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த உளவுப்பிரிவு உதவி ஆய்வாளர் ஒருவர் பெண்ணிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்துவிட்டுக் காவல் கட்டுப்பாட்டறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களிடமும் விசாரணை செய்துள்ளார் அப்போது அவர்கள் போதையில் உதவி ஆய்வாளர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், ஆத்திரம் அடைந்த இருவரும் உதவி ஆய்வாளரைத் தாக்கி விட்டு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் காயமடைந்த உதவி ஆய்வாளரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.