மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.6) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 948 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் தமிழ்நாட்டில் இருந்த 24 ஆயிரத்து 871 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வருகை புரிந்த 27 நபர்களுக்கும் என, 24 ஆயிரத்து 898 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 635 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 468 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில், மேலும் 21,546 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 195 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 974 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 3,70,596
செங்கல்பட்டு - 90,264
கோயம்புத்தூர் - 88,342
திருவள்ளூர் - 66,644
சேலம் - 45,056
காஞ்சிபுரம் - 41,668
கடலூர் - 32,198
மதுரை - 35,638
வேலூர் - 29,738
தஞ்சாவூர் - 27,556
திருவண்ணாமலை - 25,166
திருப்பூர் - 29,311
கன்னியாகுமரி - 24,111
திருச்சிராப்பள்ளி - 26,928
தூத்துக்குடி - 27,345
திருநெல்வேலி - 28,498
தேனி - 22,231