தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2021, 10:06 PM IST

ETV Bharat / state

கூவம், அடையாற்றில் நாள்தோறும் அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா?

கூவம், அடையாற்றில் பொருத்தப்பட்டிருக்கும் வலைகள் மூலம் தினமும் 350 டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Chennai corporation fixed net in coovam river
கூவம், அடையாற்றில் நாள்தோறும் அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சென்னையில் கூவம், அடையாறு ஆறுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவை கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் கூவம் ஆற்றில், எட்டு இடங்களில் வலை அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்பி வேலுமணி ட்வீட்

இதன் மூலம் தினமும், 350 டன் அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சென்னை மாநகராட்சி சார்பில் அகற்றப்படுகின்றன. மழை வெள்ளம் காரணமாக, வலை அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது, மீண்டும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அடையாறு ஆற்றிலும், மூன்று இடங்களில், வலைகள் அமைக்கப்பட உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கூவம், பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பணிக்கு ரூ. 1281.88 கோடி நிதி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details