தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை அளிக்கவும்!

சென்னை: 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை அளிக்கவும்!
25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை அளிக்கவும்!

By

Published : Apr 10, 2020, 6:00 PM IST

இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 25க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் விவரங்களை மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளிக்க வேண்டும்.

இதையடுத்து அந்த படிவத்தில், 25 மாணவர்களுக்குக் குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியல், அந்தப் பள்ளியின் பெயர், மாணவர்களின் எண்ணிக்கை, பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அந்தப் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏதுவாக உள்ள அருகாமைப் பள்ளியின் பெயர் மற்றும் தூரம் ஆகியவற்றை உடனடியாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளின் விவரங்களை அளிக்கவும்

இதையும் படிங்க:பலத்த காற்றால் கீழே சாய்ந்த தொலைத்தொடர்பு கோபுரம்

ABOUT THE AUTHOR

...view details