தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி  முறைகேடு: கைதாகி 48 மணிநேரமான அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைதாகி உள்ள மூன்று அரசு ஊழியர்களில், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வந்த ரமேஷ் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசு ஊழியர் பணியிடை நீக்கம்
அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

By

Published : Jan 27, 2020, 3:02 PM IST

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக கடந்த 26ஆம் தேதி மாலை வரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் அரசு ஊழியர்கள் ஆவார்கள். பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த ஊழியர் ரமேஷ், எரிசக்தி துறையில் பணியாற்றக் கூடிய திருக்குமரன் ஆகிய இருவரும் கடந்த 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அரசு ஊழியர்கள் விதிமுறைப்படி, கைதாகி 48 மணி நேரம் கடந்தால் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வந்த அலுவலக உதவியாளர் ரமேஷை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் எரிசக்தித்துறையில் பணியாற்றி வந்த திருக்குமரனையும் பணியிடை நீக்கம் செய்து அந்தத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும் 26ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம் காந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரி கூறும்போது, அரசு விதிகளின் அடிப்படையில் ஓம்காந்தன் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் எனக் கூறினார்.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பகீர் பின்புலம்... முக்கியக் குற்றவாளி தலைமறைவு!

ABOUT THE AUTHOR

...view details