கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வில் கேட்கப்பட்ட150 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, குரூப்-1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்ற விண்ணப்பதாரர் தொடர்ந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட150 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஒப்பு கொள்ளப்பட்டது. இதற்கான மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணையில் வழக்கு தொடர்ந்த விக்னேஷின் மதிப்பெண் பட்டியலை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.