சென்னை:உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 176 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இவர்களுக்கான முதனிலை எழுத்து தேர்வு 2019 நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2020 மார்ச் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த முதன்மை எழுத்துத் தேர்வு கரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.