தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உபி அரசை கண்டித்து தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை: உத்தரப் பிரதேச மாநில அரசை கண்டித்து, தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் இன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம்
தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம்

By

Published : Oct 5, 2020, 9:51 AM IST

Updated : Oct 5, 2020, 4:14 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெறும் மின்சார ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (அக். 05) நாடு தழுவிய மின் ஊழியர்கள் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மாநிலத்தின் அனைத்து மின் வாரிய அலுவலகங்களிலும், காலை, மதிய உணவு இடைவெளியில் உத்தரப் பிரதேச அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (அக்.05) மதிய உணவு இடைவேளையில், மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர்.

உத்தரப் பிரதேச அரசு மின் வாரியத்தை தனியாருக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகளை கண்டித்து, ஏற்கனவே போராட்டம் நடத்திய மின் வாரிய ஊழியர்கள் மீது பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயாராகி வரும் நிலையில் நாடு முழுமையாக மின் வாரிய ஊழியர்களின் ஒற்றுமையை காட்டுவதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அலுவலர்கள்

இதையும் படிங்க: மின்வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்ககூடாது- மின்துறை ஊழியர்கள் வலியுறுத்தல்

Last Updated : Oct 5, 2020, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details