இதுதொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு அணை எண்.61 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத இடங்களை நிரப்ப, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2020-இல் ஒதுக்கீடு ஆணை பெற்றுள்ள ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான இணையதளம் வாயிலான கலந்தாய்வு விண்ணப்ப விளம்பர அறிவிக்கை நாளை (நவ. 22) வெளியிடப்பட உள்ளது.
ஆதிதிராவிடர் விண்ணப்பதார்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - கலந்தாய்வு
சென்னை: தமிழ்நாடு பெறியியல் சேர்க்கை 2020-21ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் விண்ணப்பதார்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் விண்ணப்பதார்களுக்கான பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு இந்தாண்டு விண்ணபித்த தமிழ்நாட்டைச் சார்ந்த விண்ணப்பதார்களுக்கான கலந்தாய்வு வரும் நவ. 24 முதல் 27ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே ஒதுக்கீடு ஆணை பெற்ற விருப்பமுடைய விண்ணப்பதார்கள் SCA-ல் நிரப்பப்படாமல் உள்ள காலி சேர்க்கை இடங்களை பெற இணையதள கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.