தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியியல் சேர்க்கை 2020: இரண்டாம் சுற்று முடிவுகள் வெளியீடு - கவுன்சிலிங்கிற்கான ஒதுக்கீடு முடிவு

சென்னை: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டி.என்.இ.ஏ) 2020இன் இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கிற்கான ஒதுக்கீடு முடிவுகளை தமிழ்நாடு அரசு முறையாக அறிவித்துள்ளது.

TNEA 2nd Allotment Result 2020 Declared
TNEA 2nd Allotment Result 2020 Declared

By

Published : Oct 21, 2020, 4:46 PM IST

பி.டெக் சேர்க்கைக்கான டி.என்.இ.ஏ கவுன்சிலிங்கில் பங்கேற்ற மாணவர்கள், tneaonline.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக தகுதி மற்றும் இருக்கை ஒதுக்கீட்டு முறையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

டி.என்.இ.ஏ 2020 இரண்டாம் சுற்று ஒதுக்கீடு முடிவை மாணவர்கள் சரிபார்க்க https://www.tneaonline.org/ இந்த நேரடி இணைப்பையும் பயன்படுத்தலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தற்போது 3 மற்றும் 4ஆவது சுற்றுகளுக்கான ஆலோசனை செயல்முறையினை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.

தற்போது மூன்றாவது சுற்றுக்கான கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதில், 35 ஆயிரத்து,168 முதல் 70 ஆயிரத்து 300 மாணவர்கள்வரை பங்கேற்க முடியும், நான்காவது சுற்றில் 70 ஆயிரத்து 301 முதல் ஒரு லட்சத்து10 ஆயிரத்து 873வரை தரவரிசை பெற்ற மாணவர்கள் பங்கேற்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details