தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai Rain: சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ! - tn rain

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

tnche-met-balachandran-pressmeet
BhaTN_CHE_MET_BALACHANDRAN_PRESSMEET_7210963rat

By

Published : Jun 19, 2023, 5:17 PM IST

N_CHE_MET_BALACHANDRAN_PRESSMEET_7210963

சென்னை: சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இயல்புக்கு மாறாக ஜூன் மாதத்திலேயே சென்னையை குளிர்வித்து வரும் மழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசியதாவது, "தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்துள்ளது. அடுத்து வரும் இரு தினங்களுக்கு (ஜூன் 20, 21) ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கனமழையை பொறுத்தவரையில் அடுத்து 24 மணி நேரத்திற்குள் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தமிழக கடற்கரை பகுதிகள், குமரி கடல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும்.

இதனால், மீனவர்கள் அடுத்து வரும் இரு தினங்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மீனம்பாக்கத்தில் 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. முன்னதாக, 1996 ஆம் ஆண்டு 282.2 மில்லி மீட்டர் பதிவாகி இருக்கிறது. தற்போது 158.2 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது.

நுங்கம்பாக்கத்தை பொறுத்தவரையில் கடந்த 73 வருடங்களில் மூன்றாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. 1996 ஆண்டில் 347.9, மில்லி மீட்டர் மழையும், 1991இல் 191.9 மில்லி மீட்டர் மலையும் தற்போது 84.7 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இன்று வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இயல்பு மழையளவு 34.4 மில்லிமீட்டர் ஆனால் பதிவான மழை அளவு 30.5 மில்லி மீட்டர் இது 11% இயல்பை விட குறைவு.

ஐந்து தினங்களாகவே மழை இருக்கிறது என்று தெரிவித்து வந்திருக்கிறோம். மேலும், ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறோம், சென்னைக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும். வளிமண்டல மேலடுக்கு சூழற்ச்சி காரணமாக மழைப்பொழிவு வேறுபடும்" என கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details