சென்னை:சென்னை ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்ததாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யநாராயணன் பல மோசடிகள் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, தி.நகர் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-17ஆம் ஆண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்தது, 2018-19ஆம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம்,காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் ரூ. 30 லட்சம் செலவு செய்தது, அதே போல 2017-18ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் சட்டத்திற்கு புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.