தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை: சென்னையில் தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள் - chennai airport

சென்னை விமான நிலைய பகுதியில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

விமானங்கள்
விமானங்கள்

By

Published : Sep 22, 2021, 11:06 AM IST

சென்னை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று (செப். 21) நள்ளிரவிலிருந்து இன்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனையொட்டி தோகாவிலிருந்தும், துபாயிலிருந்தும் அதிகாலை வந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திரும்பி அனுப்பப்பட்டன.

மேலும் அதிகாலை 3.10 மணிக்குத் துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானமும், கொழும்பிலிருந்து வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானமும் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்துப் பறந்துகொண்டிருந்தன.

அதைப்போல் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களான சிங்கப்பூர், துபாய், சாா்ஜா, தோகா, குவைத், ஹாங்காங், கொழும்பு உள்ளிட்ட ஒன்பது சர்வதேச விமானங்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாகத் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

அதிகாலை 4 மணிக்கு மேல் மழை ஓய்ந்ததும் பெங்களூரு சென்ற விமானங்கள் சென்னைக்குத் திரும்பிவந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதையும் படிங்க: கடல் நீரை மேகம் உறிஞ்சும் அரிய காணொலி வைரல்!

ABOUT THE AUTHOR

...view details