சென்னை:வடகிழக்கு பருவமழையானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. ஆனால், கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இன்று (நவ.13) இரவு முதல் 15- ஆம் தேதி வரை, நாகை முதல் சென்னை வரை கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் (Weather Man) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வெதர்மேன் தெரிவித்ததாவது, “தமிழகத்தில் 13-ஆம் தேதி (இன்று) இரவில் இருந்து 15-ஆம் தேதி மதியம் வரை, நாகை முதல் சென்னை வரை உள்ள கடலோர பகுதிகளில், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையில், கடலோர மாவட்டங்களுக்கு இம்முறை கனமழைக்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் பகிர்ந்த மீமிஸ் (Memes) ஒன்றில் “கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டு பல காலங்கள் ஆகிவிட்டது என்றும் இம்முறை விடுமுறைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து சென்னை வெதர்மேன் ராஜ ராமசாமி கூறுகையில், “தமிழகத்தில் கடலோர மாவட்டங்களான நாகை முதல் சென்னை வரை கன மழைக்கு வாய்ப்புள்ளது.