தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! - கனமழை

TN Rain update: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 4:23 PM IST

சென்னை: இது குறித்து சென்னை மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செப்-23)கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்பு உள்ளாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழைப்பதிவு விபரம்:உதகமண்டலம் (நீலகிரி), பல்லடம் (திருப்பூர்) தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), துறையூர் (திருச்சி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

புலிப்பட்டி (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சிவகங்கை, பெரியகுளம் AWS (தேனி), நாகுடி (புதுக்கோட்டை), வத்திராயிருப்பு (விருதுநகர்), சின்கோனா (கோயம்புத்தூர்) தலா 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 3.செ.மீ முதல் 1 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது.

மேலும், அடுத்த இரன்டு நாட்களுக்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details