சென்னை ஆவடியில் பாலாஜி நகர் திருவாசகம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் லக்ஷ்மி நரசிம்மன்(45). இவர் கட்டுமான நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில்,2015ஆம் ஆண்டு அவர் திருமுல்லைவாயல் மணிகண்டபுரத்தில் 20 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டி முடித்துவிட்டு விற்பனை செய்யஇருந்தார். அப்போது ஆவடி அடுத்த அயப்பாக்கம், ஐயப்பன் நகரைச்சேர்ந்த அழகேசன்(49), அவரது தம்பி கார்த்திகேயன்(44) ஆகியோர் லக்ஷ்மி நாராயணனை அணுகியுள்ளனர்.
பின்னர் அவரிடம் இவர்கள் இருவரும் சேர்ந்து 10 வீடுகளை விற்பனை செய்துத் தருவதாக ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதில் இருவரும் முதலில்மூன்று வீடுகளை விற்று லக்ஷ்மி நாராயணிடம்பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால்,மீதியுள்ள ஏழு வீடுகளை விற்பனை செய்துவிட்டு, அதற்குரிய 1.55 கோடி ரூபாய் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.