முன்னாள் முதல்வர் காமராஜரின் 117ஆவது பிறந்த நாள் தம்ழிநாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை அருகே குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் காமராஜரின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடினர்.
மாணவர்கள் வேட்டி அணிந்து விழிப்புணர்வு பேரணி ! - kundrathoor
சென்னை: குன்றத்தூரில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் வேட்டி அணிந்து ஊர்வலமாக விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
விழிப்புணர்வு பேரணி
இதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று காமராஜரின் வாழ்க்கை குறித்தும் அவரின் நல்ல திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதில் பெரும்பாலான மாணவர்கள் வேட்டி அணிந்து இருந்தனர்.