தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேகமாகப் பரவும் ஒமைக்ரான்... தமிழ்நாட்டில் ஒன்பது பேருக்கு பாதிப்பு? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாட்டில் ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என முதல்கட்ட தகவல் கிடைத்துள்ள நிலையில், அதில் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

By

Published : Dec 16, 2021, 4:53 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் நேற்று (டிச.15) ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (டிச.16) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நேற்று ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனை படுக்கைகளை தயார் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணிவது குறைந்துள்ளது

ஹை ரிஸ்க் பட்டியல் நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 12 ஆயிரத்து 503 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில் உத்தேச பரிசோதனை மூலம் 1,947 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 14 ஆயிரத்து 450 பேருக்கு பரிசோதனை செய்துள்ள 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களிடையே முகக்கவசம் அணிவது குறைந்துள்ளது. தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

இரண்டாம் அலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அதுபோன்று இல்லை. தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. கரோனா சிகிச்சைக்கான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் போதுமான அளவு உள்ளது.

பொதுமக்கள் அறிகுறி ஏற்பட்டதும் கவனக்குறைவு இல்லாமல் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். தயக்கம் இல்லாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

ஆய்வு முடிவுவிரைவில்தெரியவரும்

தமிழ்நாட்டில் இதுவரை ஒன்பது பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கலாம் என முதற்கட்ட பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. அதில் ஒருவருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்புடைய ஏழு நபர்களுக்கும் ஒமைக்ரான் அறிகுறி இருக்கிறது. மேலும் காங்கோவில் இருந்து வந்த பெண் ஒருவருக்கு எஸ்- ஜீன் (S வகை) மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

இவர்கள் எட்டு பேரின் மாதிரிகளும் பெங்களூரு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கை வந்தவுடன் உறுதியான தகவல் தெரியவரும். இவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

பறவைகாய்ச்சல் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது, 3 லட்சம் மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து மனம் திறந்த அமைச்சர் சேகர்பாபு

ABOUT THE AUTHOR

...view details