தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தொடர்ந்து உழைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும்' - தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்ற வேண்டும் என அக்கட்சியின் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Aug 24, 2021, 8:02 AM IST

சென்னை: தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்டத் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர். விரைவில் ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் அடுத்தக்கட்ட திட்டமிடல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் பாஜக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும்

நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், வேல் யாத்திரை எனத் தொடர்ச்சியாக ஓய்வின்றி கட்சிப் பணி செய்ததுபோல், வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதே வேகத்தோடு உழைக்க வேண்டும். தொடர்ந்து உழைத்தால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும்" என்று நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டினார்.

பொறுப்புகளில் இருந்து விலகிய இல. கணேசன்

முன்னதாக, கமலாலயத்தில் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல. கணேசன், பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையைச் சந்தித்து, பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதற்கான தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details