தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி; தமிழகத்தில் சில மாவட்டத்தில் உறைபனி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN weather update: மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் இரண்டு தினங்களுக்கு உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரியில் இரண்டு நாட்களுக்கு உறைபனி
நீலகிரியில் இரண்டு நாட்களுக்கு உறைபனி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 7:35 PM IST

சென்னை:மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன.17) வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜன.17) வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தென்தமிழக மாவட்டங்களில் நாளை (ஜன.18) ஓரி இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தென்தமிழக மாவட்டங்களில் நாளை மறுநாள் (ஜன.19) ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், ஜனவரி 20 ம் தேதி முதல் 23ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை:தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் இன்று (ஜன.17) மற்றும் நாளை(ஜன.18) இரவு வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஓட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். இந்த வானிலையால் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கைகளும் இல்லை” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:மதுரை ஆயி பூரணம் அம்மாளை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details