நீர்வழித் தடங்களை பாதுகாக்க தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து நீர் நிலைகள், நீர் வழித்தடங்களை பாதுகாக்க அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தலைமைச் செயலர் தலைமையில் அதற்கான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை செயலர் பிரபாகர், உள்ளாட்சித் துறை செயலர் ஹர்மந்தர் சிங், வருவாய்துறை அதுல்யா மிஸ்ரா, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.