தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

TN Rain Update: தமிழகத்தில் நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 3:48 PM IST

சென்னை: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல வானிலை மையம் அறிக்கையில் கூறியதாவது,"மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் நாளை மறுநாள் சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 - 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை பதிவு: கொடைக்கானல் படகு குழாம் 7 செ.மீ அளவு மழையும், திருப்பத்தூர், விருதுநகர் தலா 6 செ.மீ அளவு மழையும், திருமானூர், மொடக்குறிச்சி, குப்பணம்பட்டி, சிவகங்கை, பூதலூர், பட்டுக்கோட்டை தலா 5 செ.மீ அளவு மழையும் பதிவாகி உள்ளது.

அதேபோல் கொடைக்கானல், சென்னிமலை, பேரையூர், பரமத்திவேலூர், விராலிமலை, தம்மம்பட்டி, வடபுதுப்பட்டு, கோவிலங்குளம், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ அளவு மழை பதிவாகி உள்ளது. மேலும், திண்டுக்கல், கரூர் பரமத்தி, பாலவிடுதி, உசிலம்பட்டி, மங்களபுரம், திருக்காட்டுப்பள்ளி, நந்தியார், துவாக்குடி, சாத்தான்குளம், சேத்துப்பட்டு, திருச்சுழி, சாத்தான்குளம் ARG, விருதுநகர் AWS ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ அளவு மழை பதிவாகி உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகள்: செப்.20 மற்றும் செப்.21 ஆகிய தேதிகளில் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்: இன்று (செப்.20) லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என சென்னை மண்டல வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவி மீது சரமாரி தாக்குதல்! இளைஞருக்கு போலீசார் வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details