தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி ஜெயஸ்ரீ எரித்து கொலை: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு மதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

14-year-old girl burnt to death
14-year-old girl burnt to death

By

Published : May 12, 2020, 12:20 AM IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீயை, அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் கலியமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன் விரோதம் காரணமாக, பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், "குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்க வேண்டும். ஊரடங்கின் போது, இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் தமிழ்நாடு அரசு தான் இதற்குப் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்" என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் விடுத்த அறிக்கையில்,"இக்கொடூரச் செயல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்தார். இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில்," ஆயிரம் முன்பகை இருந்தாலும், மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details