சென்னை:தனியார் கல்லூரியில், கணக்கீட்டு அறிவியல் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில், பங்கேற்ற சட்டதுறை அமைச்சர் ரகுபதி, மாணவர்களிடம் கணினி அறிவியலின் சிறப்புகளையும், சட்டம் மற்றும் சிறை துறையில் கணினி அறிவியலின் பங்களிப்புகள் பற்றியும் எடுத்துரைத்த்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில் "11 மற்றும் 12 ம் வகுப்பு பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் இருக்கிறது. கணினி அறிவியல் அடிப்படையானது. கிராமத்தில் இருக்கக்கூடிய விவசாயி செல்போனில் குறுஞ்செய்தியை பார்க்கிறார் என்றால் அது கணினி அறிவியலின் தொழில்நுட்ப வளர்ச்சியாகும்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்ட பத்து மசோதாக்களையும் ஆளுநருக்கு அனுப்பினோம். அவர் அதை திருப்பி அணுப்பிவிட்டார். அவர் என்ன காரணங்களுக்காக மசோதாவை திருப்பி அனுப்பினேன் என்று கூறியிருந்தால். அதற்கு உரிய விளக்கத்தை அளித்து இருப்போம். ஆனால் ஆளுநர் அப்போது சும்மா அனுப்பிவிட்டு தற்போது தமிழக அரசு மீண்டு அந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன்,
அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகி உள்ள நிலையில், தற்போது அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்காக, உள்துறை அமைச்சகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருப்பதாக ஒரு செய்தியை அனுப்பி இருக்கிறார்.