சென்னை:தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், மார்ச் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வினை 7,600 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 8.80 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையில் நடைபெறுகின்றன. இந்தத் தேர்வினை 7,600 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 8.50 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு தேவையான பணிகளை அரசுத் தேர்வுத்துறை செய்து வருகிறது.