சென்னை:உயர் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் கல்லூரிகளில் நிரந்தர உதவி பேராசிரியர்கள் நியமனங்கள் போட்டித்தேர்வு மூலம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துக் கூறியுள்ளதாவது, "அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019ல் அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்வுப் பணியை முடிக்க இயலவில்லை. இந்தப் பிரச்சினையை அரசு தீவிரமாகக் கவனத்தில் கொண்டு முதலமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழுக் கூட்டப்பட்டு, தகுதி, கற்பித்தல் அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வுக்குச் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறையைக் கைவிட்டு, அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரியப் போட்டி எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் தேர்வு முறை முடிவு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.