தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தடி நீரை செயற்கையாக உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டம்

சென்னை : நிலத்தடி நீர் குறைந்துவரும் நிலையில் செயற்கை வழிமுறையை கையாண்டு நிலத்தடி நீரை உயர்த்த 260 கோடி நிதி ஒதுக்கி நீர் செறிவூட்டும் திட்டம் ஒன்றை செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

tn govt's plan to artificially raise underground water resources
செயற்கையாக நிலத்தடி நீரை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டம் !

By

Published : Jan 28, 2020, 8:08 AM IST

நிலத்தடி நீர் குறைந்து வருவதன் எதிரொலி காரணமாக தமிழ்நாட்டில் ₹260 கோடி ரூபாய் செலவில் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு குடிநீர், பாசன, இதர தேவைகளுக்கு நிலத்தடி நீர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருவதால் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவரும் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு, செயற்கை முறையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் திட்டங்களை அதிக நிலத்தடி நீர் சுரண்டப்பட்ட பகுதி, மிகவும் அபாயகரமான பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

செயற்கையாக நிலத்தடி நீரை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டம்

முதல்கட்டமாக நிலத்தடிநீர் செறிவூட்டும் திட்டத்திற்கு 60 கோடி ரூபாய் செலவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில், தஞ்சாவூர் மாவட்டத்திற்கென 48.41 கோடி ரூபாயும் திருவாரூர் மாவட்டத்திற்கென 11. 73 கோடி ரூபாயும் செலவிட தமிழ்நாடு பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீடு வங்கியின் நிதியைப் பெற்று இத்திட்டத்தை மேற்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் தகவல் தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க : டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணை

ABOUT THE AUTHOR

...view details