தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா ஒழிப்புப்பணியில் ஈடுபடுபவர்களிடம் வீட்டைக் காலி செய்ய வற்புறுத்தக் கூடாது; மீறினால் சட்ட நடவடிக்கை' - அரசு எச்சரிக்கை - வீட்டு உரிமையாளர்களுக்கு அரசு எச்சரிக்கை

சென்னை: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் பணியாளர்களிடம் வீட்டைக் காலி செய்யுமாறு நிர்பந்திக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

tn govt warned Corona workers should not be forced to vacate the house
tn govt warned Corona workers should not be forced to vacate the house

By

Published : Apr 22, 2020, 2:08 PM IST

Updated : Apr 22, 2020, 2:35 PM IST

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சில வீட்டின் உரிமையாளர்கள் கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் வீட்டைக் காலி செய்யுமாறு நெருக்கடி கொடுப்பதாக புகார் வந்துள்ளது.

கரோனா ஒழிப்புப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை வாடகை வீட்டிலிருந்து காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் வற்புறுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும், காவல் துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 22, 2020, 2:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details