தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ் கலாசார உடைகளையே அரசு ஊழியர்கள் அணிய வேண்டும்’

சென்னை: தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் உடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அரசாணை வெளியீடு

By

Published : Jun 1, 2019, 5:35 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் நேர்த்தியான, சுத்தமான உடைகளை அணிய வேண்டும். அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையில் உடைகள் இருக்க வேண்டும். பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டும் அணிய வேண்டும். சேலையைத் தவிர மற்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிவது அவசியம். உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும்.

ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட், சட்டை ஆகியவற்றை அணிய வேண்டும். டீ-சர்ட் போன்ற உடைகளை அணியக்கூடாது. நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆஜராகும்போது ஆண் ஊழியர்களாக இருந்தால் முழு நீள ஸ்லீவ் கொண்ட கோட்களை டையுடன் அணிய வேண்டும் அல்லது வேட்டி அல்லது இந்திய பாரம்பரிய உடைகளை அணியலாம், அந்த ஆடைகள் மெல்லிய வண்ணத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களில் பெண் ஊழியர்கள் ஆஜராகும்போது, சேலை அல்லது சல்வார் கமீஸ் அல்லது சுடிதார் அணிந்து செல்ல வேண்டும். சேலை தவிர மற்ற உடையுடன் மெல்லிய வண்ண துப்பட்டாவையும் அணிந்திருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details