தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொத்தடிமை தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சரிடம் கோரிக்கை - முதலமைச்சரிடம் கோரிக்கை

தமிழ்நாடு முழுவதுமுள்ள கொத்தடிமை தொழிலாளர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொத்தடிமை நிலையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொத்தடிமை தொழிலாளர்கள்
கொத்தடிமை தொழிலாளர்கள்

By

Published : Feb 9, 2022, 3:23 PM IST

சென்னை: கொத்தடிமை தொழில் முறை ஒழிப்பு தினம் மாநிலம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

முன்னதாக திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் அரசால் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள், நலச்சங்கத்தை உருவாக்கியுள்ளனர். சங்கத்தின் நிர்வாகிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (பிப். 09) தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், “பச்சையம்மாள் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்டவர். கொத்தடிமை குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உடனடி நிவாரணத்தொகையை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கில் மட்டுமே பணம் செலுத்தப்பட வேண்டும்.

முழு மறுவாழ்வுக்கான தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வழக்கு நிறைவு பெற காத்திருக்காமல் நிவாரண உதவியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளோம்” என்றனர்.

கொத்தடிமை தொழில் முறையை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்; இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கொத்தடிமைகளாக இருந்து வருபவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details