கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தற்போது வரை இறுதி ஆண்டு பருவத் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், பருவத் தேர்வு நடத்தும் முன்னர் முதுகலை பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை சில கல்லூரிகள் நடத்தி வருகின்றன.
முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது - கல்லூரி கல்வி இயக்குநரகம் - முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த கூடாது
சென்னை: இறுதி பருவத் தேர்வு நடத்தும் முன்னர் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கை நடத்த கூடாது -கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவிப்பு!
ஐந்தாவது பருவ மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆனால் அவ்வாறு செய்வது தவறு என கல்லூரி கல்வி இயக்குநரகம் சுட்டிக்காட்டியுள்ளது. பருவத் தேர்வு முடியும் முன்னர் முதுகலை பட்ட மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தினால், அந்த கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க...தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு: பெற்றோர் ஆலோசனை தெரிவிக்கலாம்...!