தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களை மக்கள் பார்க்க நாளை தடை!

குடியாசு தின விழாவை முன்னிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகியோரின் நினைவிடங்களை மக்கள் பார்க்க நாளை தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களை மக்கள் பார்க்க நாளை தடை
எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களை மக்கள் பார்க்க நாளை தடை

By

Published : Jan 25, 2023, 2:12 PM IST

சென்னை: குடியாசு தின விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் நாள் சென்னை, மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கமாகும். தற்போது அந்த இடத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆகையால் இந்தாண்டு தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் குடியரசு தின விழா மெரினா கடற்கரைச் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறவுள்ளது. எனவே, பாதுகாப்பு காரணங்களால் 25.01.2023 முதல் 26.01.2023 முற்பகல் வரை அண்ணா சதுக்கத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா ஆகிய தலைவர்களின் நினைவிடங்களை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆணைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு தமிழ்நாடு அரசு சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரோடு வனப்பகுதியில் தரையிறங்கிய ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர்!

ABOUT THE AUTHOR

...view details