தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வாங்குறீங்களா.. கொஞ்சம் கவனீங்க..! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதற்காக அரசு அறிவித்துள்ள வழிமுறைகள் குறித்து விரிவாக அறிந்துக்கொள்ளுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 9:51 AM IST

Updated : Oct 22, 2023, 4:35 PM IST

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது மாதம் ரூ.1,000 பெறும் பயனாளிகள் உள்ளிட்டோரின் தரவுகள் மாதம், அரையாண்டு, ஆண்டு வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஆய்வில் இத்திட்டத்திலிருந்து விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்த 30 நாட்களுக்குள் பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு பயனாளிகளின் தகுதி உறுதிபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்பட உள்ளது.

மேலும் வருமான வரித்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளின் அடிப்படையில், பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் உள்ள 1.65 கோடி பயனாளிகள் உள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது ரூ.1,000 பெற்று பலன் அடைந்து வருபவர்கள் உள்ளிட்டோர்களுக்கும் மாதம், அரையாண்டு, ஆண்டு வாரியாக சரிபார்க்க வேண்டிய தரவுகளாக இத்திட்டத்திற்கான சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அவையாவன,

1. மாதந்தோறும் (Monthly) சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள்

  • இறப்புப் பதிவு (Death Registration)
  • ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தரவுகள் (IFHRMS) மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்களின் பணியாளர்கள் பற்றிய தரவுகள்
  • சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதிய தரவுகள் (SSS)
  • அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய தரவுகள்
  • வருமானச் சான்று தரவுகள்
  • நான்கு சக்கர / கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதரவுகள் காலாண்டு (Quarterly) முறையில் சரிபார்க்க வேண்டிய தரவுகள்
  • பொது விநியோக திட்டம் தொடர்பான தரவுகள் (PDS)
  • சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள் (GST)
  • நில உடமை தொடர்பான தகவல் தளங்கள் (Tamil Nilam, Registration Data base, GRAINS Portal)

2. அரையாண்டு (Half Yearly) முறையில் சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள்

  • தொழில் வரி செலுத்தப்பட்ட தரவுகள் ( Professional Tax)
  • மின்சாரப்பயன்பாட்டு தரவுகள் (TANGEDCO)

3. ஆண்டு தோறும் (Annually) சரிபார்க்கப்பட வேண்டிய தரவுகள்

  • வருமான வரி செலுத்தப்பட்ட / தாக்கல் செய்யப்பட்ட தரவுகள் (Income Tax)
  • சொத்து வரி குறித்த தரவுகள் (Property Tax)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அடங்கிய தரவுகளை அரசுத் துறைகள் தொழில்நுட்ப தொடர்பு வழியாக, நிகழ் நேரத்தில் அல்லது உரிய கால முறையில் தகவல் தரவுகளை, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட இணையதளத்திற்கு பகிர்ந்தளிக்க ஆணையிடப்படுகிறது.

இத்தகவல்கள் அடிப்படையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் (Auto Renewal) தானாகப் புதுப்பிக்க வேண்டும். தானாகப் புதுப்பிக்கப்படுதல் மூலமாக நீக்கம் செய்யப்படும் பயனாளிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்து பயனாளிகள் முறையீடு செய்ய விரும்பினால், இணையதளம் மூலம் மேல்முறையீடு செய்யலாம்.

சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் இணைய வழியாக பதிவு செய்யாமல் விடுபட்ட இறந்த பயனாளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் வழியாக பெற்று ஒவ்வொரு மாதமும் இணையதளத்தில் பதிவு செய்தல் வேண்டும். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர், நீக்கம் செய்யப்பட வேண்டிய பயனாளிகளின் பட்டியலினை இணையதளம் வழியாக பிரதி மாதம் 24ஆம் தேதிக்குள் சமூகப் பாதுகாப்பு திட்ட ஆணையருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

மேல்முறையீடு செய்தவர்கள் கவனத்திற்கு:கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பதார்களின் மேல்முறையீடு (Appeal) தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்களின் கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட இவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், நிராகரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக மேல்முறையீடு செய்யவேண்டும்.

இதையும் படிங்க:மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 8,833 பேர் தகுதி நீக்கம்.. அரசு கூறும் காரணம் என்ன?

Last Updated : Oct 22, 2023, 4:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details