சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 7) மனிதவள மேலாண்மைத்துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்,
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசு போட்டித் தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்படும்.