தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI), தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்குவதற்கு 2020 மே 21 அன்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.
அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களைக் கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், செய்தித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கைவைத்தனர்.
தற்போது இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI), தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (STEPS) கோரிக்கையை ஏற்று நடிகர், நடிகை, தொழில்நுட்பப் பணியாளர்கள் என அதிகபட்சமாக 60 பேரைக் கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 2020 மே 31ஆம் தேதிமுதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.