தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பக்ரீத் பண்டிகை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து - etv bharat

இஸ்லாமிய மக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பன்வாரிலால் புரோகித் வாழ்த்து
பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

By

Published : Jul 21, 2021, 9:35 AM IST

சென்னை:நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று (ஜூலை 21) பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புனித நாள்

அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி நம்முடைய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புனித நாள் அன்பு, சகோதரத்துவம் மற்றும் மனிதகுலத்துக்கான சேவையை குறிக்கிறது.

வாழ்க்கையை வளப்படுத்தட்டும்

இந்த திருநாளில் பிரார்த்தனை, இரக்கம், தாராள மனப்பான்மை ஆகியவற்றின் பாதையை கடைப்பிடிக்க நாம் அனைவரும் தீர்மானிப்போம். இந்த திருவிழா அமைதி, நல்லிணக்கம், செழிப்பு, நல்ல ஆரோக்கியத்துடன் நம் வாழ்க்கையை வளப்படுத்தட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:‘இஸ்லாமிய சகோதரர்களுக்கு நெஞ்சார்ந்த பக்ரீத் வாழ்த்துகள்’- கே.எஸ். அழகிரி

ABOUT THE AUTHOR

...view details