அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஏற்கனவே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள சிட்கோ அலுவலகத்தில், ஃபோர்டு நிறுவனத்திற்கு நேரடி உதிரிபாகங்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுடன் (டயர் - 1) தா.மோ. அன்பரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அன்பரசன் கூறுகையில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கிவரும் ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதால் அதனை மூட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதற்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் தரப்பிலிருந்து வைத்துள்ளனர். எனவே அரசின் மூலமாகச் சில சலுகைகள் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.