வேலூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான விவரம்:
வேலூர் மாவட்டம்
- வேலூர்,
- திருப்பத்தூர்,
- ராணிப்பேட்டை
- வேலூர் மாவட்டத்தில் வேலூர், குடியாத்தம் என இரண்டு புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு, அதில் வேலூர், அரக்கோணம், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி. குப்பம் ஆகிய ஆறு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
- வேலூரிலிருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம்
- அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி என நான்கு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம்
- திருநெல்வேலி,
- தென்காசி
- திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி, சேரன்மாதேவி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை என எட்டு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
- திருநெல்வேலியிலிருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில் என இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், திருவேங்கடம், வி.கே. புதூர் என எட்டு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.