தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களின் உதவித்தொகை இரு மடங்காக உயர்வு! - மாதாந்திர தொகை

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறை செலவின உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாணவர்களின் உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு அரசு
மாணவர்களின் உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு அரசு

By

Published : Nov 19, 2021, 8:12 PM IST

சென்னை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவின உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 'தமிழ்நாடு அரசின், 2021-2022 ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு செலவு திட்ட அறிக்கையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் பயிலும் மாணவர்களின் மாதாந்திர சில்லறைச் செலவின உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்படும் எனும் அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.

மாணவர்களின் உதவித்தொகை இரண்டு மடங்காக உயர்த்திய தமிழ்நாடு அரசு
மாதாந்திர தொகை

இவ்அறிவிப்பினை, செயல்படுத்திடும் விதமாக, ஆதிதிராவிடர் நலப் பள்ளி விடுதிகள், பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி கல்விப் பயிலும் மாணவர்களுக்கு எண்ணெய், சோப்பு, சிகைக்காய், மற்றும் சலவைத்தூள் வாங்குவதற்காக வழங்கப்படும் பலவகை செலவினங்களுக்கான மாதாந்திர தொகை மாதம் ஒன்றுக்கு ரூ.50 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு
அதேபோல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலக் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான பலவகை செலவினங்களுக்கான மாதாந்திர தொகையை ரூ.75 லிருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு உயர்த்தி வழங்கப்படுவதால் இத்துறையின் கீழ் இயங்கும் 318 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள், மற்றும் 1374 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி கல்விப் பயிலும் 1,25,295 மாணாக்கர் பயன்பெறுவர்.
இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.6,67,32,250 கூடுதல் செலவினம் ஏற்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

ABOUT THE AUTHOR

...view details