சென்னை:உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தபடி கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயை மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் செப்டம்பர் மாதம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான அரசாணை இன்று (டிச.6) வெளியானது. நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து கரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை தொற்றுக்கு ஆளாகி சுமார் நான்கரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா உயிரிழப்பு குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக கூறியிருந்தது.
இதற்கிடையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் நாட்டை அச்சுறுத்திவருகிறது. தற்போது இந்த புதிய வகை வைரஸிற்கு நாடு முழுக்க 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வகை வைரஸ் முதன் முதலில் ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க:இட்லி விற்று குடும்பத்தைத் தாங்கும் அலமேலு அம்மா - இது ஓர் சாமானியரின் கதை!