தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் ஆம்புலன்ஸ் சேவை கட்டணம் நிர்ணயம்: கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து - தனியார் ஆம்புலன்ஸ் சேவை கட்டணம் நிர்ணயம்

சென்னை: கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டண வரம்பை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

ambulance
ambulance

By

Published : Jun 14, 2021, 6:06 PM IST

கரோனா தொற்று பாதிப்பு காரணமாக, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தனியார் மருத்துவமனைகள், தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்களிடமிருந்து தமிழ்நாடு அரசுக்குப் புகார் வந்தது.தனியார் மருத்துவமனைகளில் கரோனா தொற்று பாதிப்புக்கு அளிக்கப்படக்கூடிய சிகிச்சைக்கு, அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதையடுத்து அரசே சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயிக்க குழு அமைத்துள்ளது.

இந்த நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டண வரம்பை நிர்ணயத்து சுகாதரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அரசாணையில், "கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் 108 ஆம்புலன்ஸ் சேவை ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு இலவசமாக அந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது.

மற்றொருபுறம் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதற்கேற்ப தனியார் ஆம்புலன்ஸ் சேவைகளையும் அப்பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனை ஒழுங்குமுறைப்படுத்தும் நோக்கில் தனியார் ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டண வரம்பை நன்கு பரிசீலித்து அரசு தீர்மானித்துள்ளது.

அதன் விபரம்:

சாதாரண ஆம்புலன்ஸ் - முதல் 10 கீ.மீக்கு ரூ.1,500 (அதற்கு அடுத்த ஒவ்வொரு கீ.மீக்கும் ரூ.25)

அடிப்படை ஆக்ஸிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் - முதல் 10 கீ.மீக்கு ரூ. 2,000 (அதற்கு அடுத்த ஒவ்வொரு கி.மீக்கும் ரூ.50)

உயர் ஆக்ஸிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸ் - முதல் 10 கி.மீக்கு ரூ. 4,000 ( (அதற்கு அடுத்த ஒவ்வொரு கி.மீக்கும் ரூ. 100) என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணத்துக்கு அதிகமாக எந்த தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமும் கட்டணம் வசூலித்தால், 104 என்ற உதவி எண்ணில் பொதுமக்கள் புகார் பதிவு செய்யலாம். புகார் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட தனியார் ஆம்புலன்ஸ் நிறுவன் மீது கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரின் உரிமம் ரத்து செய்யப்படும். அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். உடனடியாக அந்த ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்படும்" என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details