சென்னை:2021-22ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வரும் 13ஆம் தேதி தாக்கல்செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின் நிதி செயல்பாடு குறித்த வெள்ளை அறிக்கையை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுகிறார்.
120 பக்கங்கள் கொண்ட அந்த நிதிநிலை அறிக்கையில், கடந்த அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை, கடன் சுமை, கருவூலத்தில் உள்ள பணம், நிதி வருவாய் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் இடம்பெறவுள்ளன. இன்று காலை 11.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பின்போது பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளார்.
'எளிய நிதி சேவை புதிய தொழில்களை உருவாக்கும்' - சி. பொன்னையன்
நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது இது முதன்முறையல்ல; 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்திலும் வெளியிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.