தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழான அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே நிறைவேற்றம் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

By

Published : Mar 28, 2023, 3:16 PM IST

சென்னை:அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த மொத்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 28) பட்ஜெட் மீதான பதிலுரையின்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022-2023 ஆம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டமன்றப் பேரவையில் விளக்கினார்.

அப்போது அவர் கூறுகையில், வெள்ள தடுப்பு பணிகள் திட்டம் - ரூ.1,355 கோடி, முதல்வர் கிராம சாலை திட்டம் - ரூ.4,000 கோடி, பேராசிரியர் அன்பழகன் கல்வி திட்டம் - ரூ.7,000 கோடி என பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்பின், காலை சிற்றுண்டி திட்டத்தை நிஜத்தில் செய்து காட்டி வாக்குறுதியை நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இந்தியாவிலேயே காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு வருவாய் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்த நிலையில், அதனை செயல்படுத்தாமல் இருந்தது. அதேபோல அதிமுக ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் மட்டுமே 3 லட்சத்து 27 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,704 அறிவிப்புகளை வெளியிட்டார்கள்.

ஆனால், அதற்கு நிதி கூட ஒதுக்கவில்லை. மேலும், 87 ஆயிரத்து 405 கோடி ரூபாய் மதிப்பிலான 27 சதவீத திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு ஆளுநர் உரையின் போது 78 அறிவிப்புகள், முதலமைச்சரின் தனிப்பட்ட 161 அறிவிப்புகள் மற்றும் இதர 46 அறிவிப்புகள் வெளியிட்டதோடு, 110 விதியின் கீழ் 67 அறிவிப்புகளையும், மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு சென்ற போது 88 அறிவிப்புகளையும், மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் 5 அறிவிப்புகளையும், நிதி நிலை அறிக்கையில் 338 அறிவிப்புகளையும், வேளாண் நிதி நிலை அறிக்கையில் 330 அறிவிப்புகளையும் அறிவித்து மொத்தம் 3 ஆயிரத்து 537 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 3,038 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது 86 சதவீத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதில் 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 63 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு, 39 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்து. 24 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இவ்வாறு அறிவித்த அறிப்புகளை செயல்படுத்துவதிலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஓபிஎஸ் நீக்கம் செல்லும்; பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட தடையில்லை - சென்னை உயர்நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details